Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை


ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்


முன்னுரை
விற்பனை குழுக்கள் மூலம் ஒழுங்கு முறை விற்பனை கூடமானது செயல்படுகிறது. மாவட்ட அளவில் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 21 விற்பனை குழுக்கள் செயலில் உள்ளன. இந்த குழுக்களின் கீழ் 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், 15 சோதனை சாவடிகள், 108 ஊரக சேமிப்பு கிடங்குகள் மற்றும் 108 தரம்பிரிக்கும் மையங்கள் போன்றவை செயல்படுகின்றது. மறைமுக ஏல முறையின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்கள் ஆனது விற்பனை செய்யப்படுகிறது. தரம்பிரிக்கும் வேளாண்மை விளைபொருட்களுக்கு இலவசமாகவும், விற்பனை பந்தாக இருக்கும் பட்சத்தில் பற்றுறுதி கடனையையும் விந்பனை கூடமானது தருகின்றது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் விவசாயிகள் விளைபொருட்களை கட்டாயமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விற்கின்றனர். விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று விற்கும் வணிகர்களுக்கு 1 முதல் 2 சதவிகித விளைபொருள் மதிப்பானது விற்பனை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

பெறக்கூடிய முறையான தமிழ்நாட்டில் அமுல்படுத்தப் படும்போது விவசாயிகள் பயன்பெறுகின்றனர் விளைபொருள் மதிப்பிலிருந்து 1 சதவிகிதமானது விற்பனை கட்டணமாக வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. நீலகிரியாஸ் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை அமைப்பதற்கு ரூபாய் 3.25 கோடி செலவில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படுகின்றது. விற்பனைக் கூடம் அமைப்பதற்கு நிலத்தினை தயார் செய்வதற்கு, போன்ற பல்வேறு நடவடிக்கைகளை நீலகிரி கலெக்டர் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு விற்பனை குழுக்களின் பட்டியல்:

வ.எண்

விற்பனைக்குழு

தொலைபேசி எண்

விற்பனைக் கூடத்தின் எண்ணிக்கை

1.

காஞ்சிபுரம்

04112-222811

14

2.

வேலூர்

0416-2220713

12

3.

திருவண்ணாமலை

04175-252397

16

4.

கடலூர்

04142-2230037

10

5.

விழுப்புரம்

04146-229944

17

6.

சேலம்

0427-2477467

19

7.

தருமபுரி

04342-260971

16

8.

கோயமுத்தூர்

0422-2312477

18

9.

ஈரோடு

0424-2252702

24

10.

திருச்சி

0431-2422167

17

11.

தஞ்சாவூர்

04362-223005, 277517

29

12.

புதுக்கோட்டை

04322-265695

10

13.

மதுரை

0452-2533940

21

14.

ராமநாதபுரம்(விருதுநகர்)

04562-243524

20

15.

திருநெல்வேலி

0462-2572862

19

16.

கன்னியாகுமாரி

04652-275900

 6

17.

தேனீ

04546-252207

-

18.

திண்டுக்கல்

0451-2427463

-

19.

திருவாரூர்

04366-250481

-

 

 

மொத்தம்

268

குழுக்களின் அடிப்படையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், தமிழ்நாடு.

 

மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் சேவைகள்
மின்னணுவியல் கருவி மூலம் எடை எடுக்கும் வசதிகள், சேமிப்புக் கிடங்கு வசதிகள், வங்கி வசதி, உடனுக்குடன் தொகை செலுத்துதல், தினசரி விலையின் விபரம், ஓய்வுக்கூடம், குடிநீர் வசதி, மாடு கட்டும் கூடம் இலவச மருத்துவ வசதி, இடுபொருள் கடைகள்,  தொலைபேசி மற்றும் பிரதி வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளை தருகிறது. அக்மார்க்நெட் மூலம் 93 ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் விலையை விவசாயிகள் கம்ப்யூட்டர் மற்றும் இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் விலைப்பட்டியலை விவசாயிகள் தெரிந்து கொண்டு, அதன் மூலம் விலையை நிர்ணயிக்கலாம். 2007-08ல் 100 ஒழுங்குமுறைக் கூடமானது அக்மார்க் நெட்டின் மூலம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வசதிகள்:


வ.எண்

விற்பனை குழுக்கள்

சொந்த நிலம்

கிடங்கு

ஊரக கிடங்கு

விற்பாற்றம் கொட்டகை

காய வைக்கும் முற்று

விவசாயிகள் ஓய்வு அறை

சுகாதார வசதிகள்

குடிநீர் வசதிகள்

1.

காஞ்சிபுரம்

7

-

5

4

7

2

6

5

2.

வேலூர்

9

6

4

6

4

2

7

7

3.

திருவண்ணாமலை

13

5

7

14

11

6

10

9

4.

கடலூர்

5

2

3

11

5

3

9

5

5.

விழுப்புரம்

12

4

9

-

-

-

-

-

6.

சேலம்

5

1

-

-

-

-

-

-

7.

தருமபுரி

9

1

-

-

-

-

-

-

8.

கோமுத்தூர்

18

58

-

-

-

-

-

-

9.

ஈரோடு

14

12

-

-

-

-

-

-

10.

திருச்சி

12

-

-

-

-

-

-

-

11.

தஞ்சாவூர்

10

-

-

-

-

-

-

-

12.

புதுக்கோட்டை

3

-

-

-

-

-

-

-

13.

மதுரை

4

-

-

-

-

-

-

-

14.

இராமநாதபுரம்

14

-

-

-

-

-

-

-

15.

திருநெல்வேலி

15

-

-

-

-

-

-

-

16.

கன்னியாகுமாரி

5

-

-

-

-

-

-

-

17.

தேனீ

4

-

-

-

-

-

-

-

18.

திண்டுக்கல்

6

-

-

-

-

-

-

-

19.

நாகப்பட்டினம்

1

-

-

-

-

-

-

-

20.

திருவாரூர்

1

-

-

-

-

-

-

-

21.

நீலகிரி

-

-

-

-

-

-

-

-

மொத்தம்

உற்பத்தி பொருளின் அறிவிப்பு
தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள். எண்ணெய் விதைகள், பருத்தி. மஞ்சள் போன்ற 42 வகையான வேளாண்மைப் பொருட்களானது அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆண்டின் போது வேளாண்மை வர்த்தகப் பொருட்களில் சமமான அறிவிப்பினை அறிவிக்கத் தேவையான செயல்கள் / நடவடிக்கைகள்  எடுக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு அடமானக் கடன் வசதிகள்
சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைப் பொருட்களில் விற்பனையில் ஏற்படும் இழப்பினைத் தடுக்க, ஒழுங்கு முற விற்பனைக் கூடமான அடமானக் கடனைத் தருகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள் 6 மாதம் வரை வேளாண்மைப் பொருட்களை சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கலாம். இதற்காக விளைப்பொருட்களில் 75 சதவிகிதத்தினை கடனாக, அதாவது அதிகமாக ரூபாய் 1,00,000த்தினைப் பெறலாம். இதே போல் வர்த்தகர்களுக்கு அடமானக் கடனானது காலநிலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வட்டியானது வசூலிக்கப்படும். வர்த்தகக்காரர்களிடம், 9 சதவிகித வட்டியானது வசூலிக்கப்படும். முந்தைய நதி ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டி விகிதமானது 8 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகளின் மேம்பாடு மற்றும் பொது நலத்திட்டம்
இந்தத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் / குத்தகைக்காரர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் 1 மெட்ரிக் டன் அளவுள்ள நெல் அல்லது சமமான பிற வேளாண்மை விளைப்பொருட்களை விற்கலாம். மேலும் ஒருவரின் மரணத்தின் போது / விபத்தினால் நிரந்தரமான குறைபாடு / பாம்பு கடித்து மரணமடையும் போது, இந்தக்கூடமானது மொத்தப் பணமாக / கணிசமான தொகையாக ரூபாய் 1,00,000 யை தருகிறது. விபத்தின் போது இரண்டு கைகள், கால்கள், கண்கள் இழந்த விவசாயிகள் / குத்தகைதாரர்கள் ரூபாய் 75,000 பெற தகுதியுள்ளவர்கள் ஆவர். விவசாயிகள் இதற்காக முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. விற்பனை செயற்குழு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் போன்றவை ஒவ்வொரு தனி நபருக்கும், ஒரு வருடத்திற்கு ரூபாய் 10யை முன்பணமாக தருகிறது.

தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் பட்டியல்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015